அசாதாரணமான உண்மை

கத்தோலிக்கர்களை சிலை வழிபாட்டினர் என்று CSI சபையினர் புறக்கணித்துவிட்டார்கள்.
😢😢CSI சபையின் ஞானஸ்நானம் சரி இல்லை என்று பாப்திஸ்துகள் சொல்கிறார்கள். 😃பாப்திஸ்து சபையை AG சபையினர்  பாரம்பரிய சபை என்று வெறுத்துவிட்டார்கள். 🙈AG சபையை ஒரு ஆவிக்குரிய சபையாகவே TPM மக்கள் கணக்கில் எடுக்கமாட்டார்கள். TPM மக்கள் வேறு யாரிடமும் சிரிக்ககூட மாட்டார்கள். 😭இவர்கள் ஒருவரையும் "யேகோவாவின் சாட்சிகள்" கிறிஸ்தவர்கள் என்றே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். 😞இயேசு நாமக்காரர்கள் "நாங்கள்தான் உண்மையான கிறிஸ்தவர்கள்; வேறு யாரும் பரலோகம் போகமுடியாது" என்கிறார்கள். இவர்கள் அனைவரையும் பார்த்து "பாவிகள்" என்று 7⃣ஏழாம்நாள்காரர்கள் சொல்கிறார்கள். இவர்கள் ஒருவருமே சரி இல்லை என்று "மார்மன்கள்" 😝அறிவித்துவிட்டார்கள். தங்களைத்தவிர வேறு எல்லாரும் நரகத்துக்குத்தான் போவார்கள் என்று ☺"புதிய எருசலேம்" சபையினர் முறைக்கிறார்கள். இவர்கள் ஒருவருடைய "சபை பெயரும்" சரி இல்லை என்று கிறிஸ்துவின் சபையார் Tension ஆக இருக்கிறார்கள். இதில் ஒரு ஜாதிக்காரன் வேறொரு ஜாதிக்காரனை ஏற்றுக்கொள்ளமாட்டான். இப்படி யாரும் யாரையும் ஏற்றுக்கொள்ளாமல், மிருகங்களைப்போல கடித்து குதறுவதை பார்க்கும் மற்றவர்களில் பெரும்பாலானவர்கள் கடுப்பாகி "கடவுளே இல்லை" என்னும் முடிவுக்கு வந்துவிட்டார்கள். கிறிஸ்தவர்கள் ஒன்றுசேராவிட்டால் இயேசு மட்டும்தான் கடவுள் என்று பிறரால் ஒத்துக்கொள்ள முடியாது என்று இயேசுவே சொல்லிவிட்டார். யோவான் 17:21.
✔✔✔✔✔✔✔

அட போங்கடா நீங்களும் உங்க பிரிவினைகளும்!!! ஆனா ஒன்னு மட்டுமே இப்ப புரியுது
ஒரு பயக்கிட்டயும் அன்பில்லை!!!!

இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதான்யா என் அண்ணன் அப்போஸ்தலன் பரிசுத்த புனித பவுல். 1 கொரிந்தியர் 1 :10
10 சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று , நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்

Comments

Popular Posts