யோகாவும் கிறிஸ்தவமும்

ஆதி மனிதர்களை பிசாசானவன் ஏமாற்ற முதலாவது அவன் பயன்படுத்திய மிருகமாக “சர்ப்பமும்”,
இரண்டாவது அவன் பயன்படுத்திய மரத்தின் கனியாக, “நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியும்”,
மூன்றாவது ஆரோக்கியமான வாழ்வைக் காண்பித்து அவர்களை ஏமாற்றுவதற்காக “நீங்கள் சாவதே சாவதில்லை” என்ற வார்த்தையையும்,
நான்காவது நயவஞ்சகமாக அவர்களை ஏமாற்றுவதற்காக “தேவர்களைப் போல் இருப்பீர்கள்” என்ற வார்த்தையையும் பயன்படுத்தினான்.

இந்த நான்கு காரியங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டது தான் யோகா.
இதை வரைமுறைபடுத்தியவர் பதஞ்சலி முனிவர். இவர் கி.மு. நாலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று நம்பப்படுகின்றது.

ஆயிரம் தலைகள் அல்லது ஏழு தலைகள் கொண்ட பாம்பின் படுக்கையிலிருக்கும் சில விக்கிரகங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த பாம்பிற்கு ஆதிசேஷன் (சேஷன்=பழைய பாம்பாகிய வலுசர்ப்பம் – வெளி 20:2) என்று பெயர். பதஞ்சலி தம்மை ஆதிசேஷனின் அவதாரம் என்று அறிவித்துக் கொண்டவர்.
பிசாசானவன் ஆதி மனிதர்களை ஏமாற்ற முதலாவது சர்ப்பத்தைப் பயன்படுத்தியதைப் போலவே, பதஞ்சலி முனிவரையும் பயன்படுத்தியுள்ளான். பதஞ்சலி முனிவரது சிலையானது இடுப்புக்கு மேல் மனித உருவமும், இடுப்புக்கு கீழே பாம்பின் உருவமும் கொண்டது. ஆகவே தான் யோகா கற்றுக்கொடுக்கும் இடங்களில் பாம்பின் படங்கள் வைத்திருப்பார்கள்.

இவர் யோகாவை எட்டு அங்கங்களாக வகைப்படுத்தினார். அதில் முதல் இரண்டு, “நன்மை தீமைகளைக் காண்பித்து மனிதர்களை ஏமாற்றுவதற்காகவும்”, அடுத்த இரண்டு, “ஆரோக்கியமான வாழ்வைக் காண்பித்து மனிதர்களை ஏமாற்றுவதற்காகவும்”, மீதமுள்ள நான்கு, “தேவர்களைப்போல் இருப்பீர்கள்” என்ற நயவஞ்சக வார்த்தையின் மூலாமாக மனிதர்களை ஏமாற்றவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நன்மை தீமைகளைக் காண்பித்து மனிதர்களை ஏமாற்றுவதற்காக:

1. யமா – அஹிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், பேராசையின்மை.
2. நியமா- சுத்தம் (உள் மற்றும் புறம்), திருப்தி, தவம், சுயமாய் கற்றல்.
ஆரோக்கியமான வாழ்வைக் காண்பித்து மனிதர்களை ஏமாற்றுவதற்காக:
3. ஆசனா – யோகாசனங்கள்
4. ப்ராணயாமா- மூச்சுப் பயிற்சி மற்றும் மூச்சுக் கட்டுப்பாடு.
“தேவர்களைப்போல் இருப்பீர்கள்” என்று நயவஞ்சகமாக மனிதர்களை ஏமாற்றுவதற்காக:
5. ப்ரத்யாஹரா- மனதைப் புலன்கள் வெளியே போகாமல் கட்டுப்படுத்துதல்
6. தாரணா- மனதை ஓரிடத்தில் குவித்தல்
7. தியானா- தியானம்
8. சமாதி - இறைநிலை அடைந்து அதிலேயே ஐக்கியமாதல்
ஐக்கிய நாடுகள் மாநாட்டில் பங்குபெற்ற இந்திய பிரதமர் யோகா நிகழ்ச்சியை உலகம் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையின் விளைவாக உலகெங்கும் யோகா தினம் அனுசரிக்கப்படுகின்றது. இதற்கு கிறிஸ்துவ நாடுகள் உட்பட 177 நாடுகளின் ஆதரவு கிடைத்திருக்கின்றது.

இனிமேல் ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக உலகெங்கும் கொண்டாட போகின்றார்கள். “யோகா எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல” என்று வாய் கூசாமல் பொய்களை அள்ளி விடுகின்றனர். யோகா தின அறிவிப்புக்கு பிறகு இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் யோகா வல்லுனர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால், யோகா வல்லுனர்களுக்கு அரசு அங்கீகாரத்துடன் கூடிய சான்றிதழ்கள் விரைவில் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

விரைவில் பள்ளி புத்தகத்திலும் யோகாவைப் பற்றிய பாடங்கள் சேர்க்கப்படும் என்றும் என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்றைக்கு பிசாசானவன் யோகாவின் மூலமாக மக்களை வஞ்சிக்க துடிகின்றான். “உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தேவர்களைச் சேவித்து அவர்களை நமஸ்கரியாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்”
(உபாகமம் 11:16).

யோகா என்பது உடற்பயிற்சி முறையோ, தியானமோ, ஆசனமோ கிடையாது. இது அந்நிய தெய்வத்தின் வழிபாடு. உங்கள் அலுவலகத்திலோ கல்வி நிறுவனத்திலோ யோகோ வகுப்புகள் இருந்தால் நீங்கள் தைரியமாக புறக்கணிக்க வேண்டும்.
ஆலய வளாகத்தினுள்ளோ, ஆலய ஆடிட்டோரியத்தினுள்ளோ யோகா பயிற்ச்சிக்கு அனுமதி கொடுக்க கூடாது.
பல போதகர்களும் சாத்தானின் வலையில் வீழ்ந்து கிடப்பது வேதனையே!
“ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” (மத்தேயு 24:4) என்று இயேசு நமக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் சர்ப்பத்தின் வழிபாடாகிய யோகாவிற்கு எதிர்த்து நிற்க வேண்டும். சர்ப்பங்களை மிதிக்க அதிகாரம் தந்த இயேசுவின் நாமத்தினால் யோகா சர்ப்பத்தை மிதித்து போடுவோமாக. ஆமேன். அல்லேலுயா.

(முக்கிய குறிப்பு : இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்த கிறிஸ்துவ நபர்களுடன் பகிர்ந்து, பிசாசின் சூழ்ச்சியில் விசுவாசிகள் சிக்கி வீழ்ந்து விடாதபடி துரிதமாக செயல்படுங்கள்)

By: Bro. Jeyakumar.

Comments

Popular Posts